/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கடலாடி கிராமங்களில் குடிநீர் பிரச்னை: தீர்வுகாண கோரிக்கைகடலாடி கிராமங்களில் குடிநீர் பிரச்னை: தீர்வுகாண கோரிக்கை
கடலாடி கிராமங்களில் குடிநீர் பிரச்னை: தீர்வுகாண கோரிக்கை
கடலாடி கிராமங்களில் குடிநீர் பிரச்னை: தீர்வுகாண கோரிக்கை
கடலாடி கிராமங்களில் குடிநீர் பிரச்னை: தீர்வுகாண கோரிக்கை
ADDED : ஜூன் 24, 2024 01:58 AM
சிக்கல் : கடலாடி ஒன்றியத்தில் குடிநீர் பிரச்னையுள்ள கிராமங்களை கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற நல சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.கடலாடி வட்டார தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற நல சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிக்கலில் நடந்தது.சங்கத்தின் தலைவர் அழகர் தலைமை வகித்தார்.
செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் இருளாண்டி வரவேற்றார்.நிர்வாகிகள் சத்தியா, கந்தன், எஸ். ஆலங்குளம் மூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கடலாடி ஒன்றியத்தில் குடிநீர் தேவை அதிகம் உள்ள கிராமங்களை கண்டறிந்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.சிக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டும். கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய இறப்பு போல் சம்பவம் மாவட்டத்தில் நடக்காதவாறு உரிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.