/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ செல்வாக்கை இழந்துவிட்டது தி.மு.க. பா.ஜ., மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் செல்வாக்கை இழந்துவிட்டது தி.மு.க. பா.ஜ., மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன்
செல்வாக்கை இழந்துவிட்டது தி.மு.க. பா.ஜ., மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன்
செல்வாக்கை இழந்துவிட்டது தி.மு.க. பா.ஜ., மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன்
செல்வாக்கை இழந்துவிட்டது தி.மு.க. பா.ஜ., மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன்
ADDED : ஜூன் 07, 2025 10:49 PM
ராமநாதபுரம் : மக்கள் செல்வாக்கினை தி.மு.க., இழந்துவிட்டது. இதனால் பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணியை விமர்சிக்கின்றனர். என பா.ஜ., மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.
ராணி அகல்யாபாய் கோல்கேர் 300வது பிறந்த நாளை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பா.ஜ., சார்பில் மகளிர் மாநாட்டில் பங்கேற்க நயினார் நாகேந்திரன் சென்றார். வழியில் ராமநாதபுரத்தில் பா.ஜ., வினர் வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் கூறியது: மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த கட்சியாக தி.மு.க., உள்ளது. இதன் காரணமாக பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி வைத்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
பெங்களூருவில் நடந்த கிரிக்கெட் வெற்றி விழாவை காட்டிலும் மகாராஷ்டிராவில் நடந்த விழாவில் 10 மடங்கு அதிகமாக கூட்டம் கூடியது. அதில் சிறிய அசம்பாவித சம்பவம் ஏற்படவில்லை.
விழா நடக்கும் போது அரசு விரிவான பாதுகாப்பினை வழங்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.
ஆனால் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்குக்கு விலை செல்வது போல் அமைச்சர் மனோ தங்கராஜ் சம்பந்தமே இல்லாமல் ''கோயிலுக்கு கூட்டமாக செல்வது நாகரிகமற்றது என்கிறார். இதற்கு தேர்தலில் மக்கள் பதிலளிப்பர் என்றார். ---------