/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மாற்றுத்திறனாளிகள் நல பாதுகாப்பு சங்கம் மனுமாற்றுத்திறனாளிகள் நல பாதுகாப்பு சங்கம் மனு
மாற்றுத்திறனாளிகள் நல பாதுகாப்பு சங்கம் மனு
மாற்றுத்திறனாளிகள் நல பாதுகாப்பு சங்கம் மனு
மாற்றுத்திறனாளிகள் நல பாதுகாப்பு சங்கம் மனு
ADDED : ஜன 07, 2024 04:20 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி மற்றும் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் 100 நாள் வேலை குறைகளை களைய கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
தாலுகா செயலாளர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜ்குமார், தாலுகா பொருளாளர் ஆரோக்கிய பிரபாகர் முன்னிலை வகித்தனர். அப்போது 100 நாள் வேலையில் ஏற்படக்கூடிய குறைகளை களைந்திடவும், மாநில ஊரக வளர்ச்சி ஆணையரின் ஆணையை அமல்படுத்தும் விதத்தில் பிரதி மாதம் செவ்வாய்க்கிழமை குறைதீர் கூட்டங்கள் நடத்தவும் பி.டி.ஓ., அன்புகண்ணனிடம் மனு அளித்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.