/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இலவச வீடு கட்டி கொடுத்த மாற்றுத்திறனாளிகள் சங்கம் இலவச வீடு கட்டி கொடுத்த மாற்றுத்திறனாளிகள் சங்கம்
இலவச வீடு கட்டி கொடுத்த மாற்றுத்திறனாளிகள் சங்கம்
இலவச வீடு கட்டி கொடுத்த மாற்றுத்திறனாளிகள் சங்கம்
இலவச வீடு கட்டி கொடுத்த மாற்றுத்திறனாளிகள் சங்கம்
ADDED : மார் 25, 2025 05:31 AM
கமுதி: கமுதி அருகே மாற்றுத்திறனாளி கமலக்கண்ணனுக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் இலவசமாக வீடு கட்டி கொடுக்கப்பட்டது.
கமுதி அருகே கல்லுப்பட்டியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி கமலக்கண்ணன் 45. திருமணம் முடிந்து சுப்புலட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மாற்றுத்திறனாளியான கமலக்கண்ணன் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்தார்.
இதையடுத்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் இலவசமாக வீடு கட்டி கொடுக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது.
மாற்றுத்திறனாளி சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜ்குமார்,மாவட்ட துணைத் தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளி கமலக்கண்ணன் வரவேற்றார்.
வட்டத் தலைவர் சந்திரன், செயலாளர் முருகேசன், பொருளாளர் ஸ்டாலின் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.