ADDED : மே 11, 2025 11:19 PM

தொண்டி ; தொண்டி அருகே நம்புதாளை பதினெட்டாம்படி கருப்பர் கோயில் திருவிழா நடந்து வருகிறது.
நேற்று பக்தர்கள் அழகர் வேடமணிந்து வீதி உலா சென்றனர். அழகரின் தோற்றத்தை போல் தலைபாகை அணிந்து உடலில் வண்ணங்கள் பூசி சென்றனர். முக்கிய தெருக்கள் வழியாக சென்ற அவர்களின் காலில் நீர் ஊற்றியும், வீடுகளில் வரவேற்பு கொடுத்து பால், பழம் கொடுத்தனர்.