
ராமேஸ்வரம்; இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்ததால் தமிழகத்தில் இருந்து இறால் மற்றும் ஜவுளி ஏற்றுமதி முடங்கியதால் வியாபாரிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று சி.ஐ. டி.யு., கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் செந்தில், நிர்வாகி சீனிவாசன் பங்கேற்றனர்.