ADDED : ஜன 06, 2024 05:26 AM
கடலாடி: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கடலாடி வட்டார கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பணியிட மாறுதல், பதவி உயர்வு போன்றவற்றில் வட்டார அளவில் இருந்த பழைய நடைமுறைகளை மாற்றி மாநில அளவிலான முன்னுரிமை பட்டியலுக்கு கொண்டு வந்ததை கண்டித்தனர்.
தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.