/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அமைப்பு சாரா தொழிலாளர் கண்டன ஆர்ப்பாட்டம்அமைப்பு சாரா தொழிலாளர் கண்டன ஆர்ப்பாட்டம்
அமைப்பு சாரா தொழிலாளர் கண்டன ஆர்ப்பாட்டம்
அமைப்பு சாரா தொழிலாளர் கண்டன ஆர்ப்பாட்டம்
அமைப்பு சாரா தொழிலாளர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 30, 2024 11:54 PM

ராமநாதபுரம் : தமிழகத்தில் 70 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களின் தரவுகள் காணாமல் போனதைக் கண்டித்து ராமநாதபுரம் தொழிலாளர் நல அலுவலகம்முன்பு அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்பாட்டம்நடத்தினர்.
தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் 70 லட்சம் பேரின் விபரங்கள் அதிகாரிகள் அலட்சியம், கவனக்குறைவால் காணாமல் போனது.
இதனை மீட்டெடுக்கவும், உரிய விசாரணை நடத்தவும், நேரடி பதிவுகளை துவக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு., மாவட்டத் தலைவர் சந்தானம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முத்து விஜயன், ஆட்டோ சங்க செயலாளர் வி.பாஸ்கரன், லோடுமேன் சங்க செயலாளர் சுடலைக்காசி, கைத்தறி சங்க செயலாளர் முரளி, கட்டுமான சங்கத்தலைவர் வாசுதேவன், தையல் சங்க செயலாளர் ஞானசேகர், சாலை போக்குவரத்து சங்க செயலாளர் ஆனந்த் ஆகியோர் பேசினர்.
சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் அய்யாத்துரை, மலைராஜன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.