/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புதர் அடர்ந்துள்ள பாதுகாப்பற்ற நயினார்கோவில் மின் நிலையம் மின் சப்ளையை முறைப்படுத்த கோரிக்கை புதர் அடர்ந்துள்ள பாதுகாப்பற்ற நயினார்கோவில் மின் நிலையம் மின் சப்ளையை முறைப்படுத்த கோரிக்கை
புதர் அடர்ந்துள்ள பாதுகாப்பற்ற நயினார்கோவில் மின் நிலையம் மின் சப்ளையை முறைப்படுத்த கோரிக்கை
புதர் அடர்ந்துள்ள பாதுகாப்பற்ற நயினார்கோவில் மின் நிலையம் மின் சப்ளையை முறைப்படுத்த கோரிக்கை
புதர் அடர்ந்துள்ள பாதுகாப்பற்ற நயினார்கோவில் மின் நிலையம் மின் சப்ளையை முறைப்படுத்த கோரிக்கை
ADDED : மே 29, 2025 11:09 PM

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் பி.கொடிக்குளம் ரோட்டில் துணை மின் நிலையம் செயல்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக மின் நிலையத்தை சுற்றி உள்ள வேலிகள் உடைந்துள்ளது. மேலும் கருவேல மரங்கள், செடி, கொடிகள் அடர்ந்து துணை மின் நிலையம் உள்ளது.
அப்பகுதி கிராமங்களுக்கு செல்லும் உயரழுத்த மின் வயர்களுக்கு அருகில் மரக்கிளைகள் உரசியபடி இருக்கிறது. காற்று, மழையின் போது அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
தொடர்ந்து விவசாய பணிகள் பாதிக்கப்படுவதுடன் கிராமங்களில் செயல்படும் வங்கிகள், அரசு, தனியார் பள்ளிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் மின் தடை தொடரும் சமயங்களில் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாததுடன், துாக்கத்தை தொலைக்கும் படி உள்ளது.
ஆகவே துணை மின் நிலையத்தை சீரமைப்பதுடன் உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் செல்லும் மரக்கிளைகளை அப்புறப்படுத்தி பழுதடைந்த மின்கம்பங்களையும் முறைப்படுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.