/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/70 இடத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு70 இடத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு
70 இடத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு
70 இடத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு
70 இடத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு
ADDED : ஜன 11, 2024 04:20 AM
திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 இடங்களில் முதல் கட்டமாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது நெல் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழும் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களில் இயந்திரம் மூலம் இப்பணிகள் முழுவீச்சில் நடக்கிறது.
அறுவடை செய்யப்பட்ட நெல் மூடைகளை விவசாயிகள் தமிழக அரசு சார்பில் துவக்கபட்டுள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் பெறுவார்கள்.
இதற்காக ஆண்டுதோறும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது வழக்கம்.
இந்த ஆண்டு முதல் கட்டமாக 70 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 70 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தற்போது பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இப் பணிகள் முடிந்தவுடன் கொள்முதல் நிலையங்களில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படும் என்றனர்.