Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பள்ளிகளில் திரைப்படங்கள் திரையிடுவதற்கு முடிவு

பள்ளிகளில் திரைப்படங்கள் திரையிடுவதற்கு முடிவு

பள்ளிகளில் திரைப்படங்கள் திரையிடுவதற்கு முடிவு

பள்ளிகளில் திரைப்படங்கள் திரையிடுவதற்கு முடிவு

ADDED : செப் 09, 2025 10:53 PM


Google News
திருவாடானை; குழந்தைகளுக்கான பட்டாளம், கனவு மெய்பட ஆகிய திரைபடங்களை பள்ளிகளில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் இரண்டு குழு மாணவர்களுக்கிடையே சந்திப்புகளையும், பள்ளி மாணவர்களிடம் உருவாகும் நட்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் பட்டாளம். இப்படம் மாணவர்களை அன்பின் மூலம் நல்வழிப்படுத்த முடியும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. இதே போல் 'கனவு மெய்பட' என்ற திரைப்படமும் வெளி வந்துள்ளது. இத் திரைப்படங்களை பள்ளிகளில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து திருவாடானை வட்டார வள மைய அலுவலர்கள் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறார் திரைபடங்களை திரையிட அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்டாளம், கனவு மெய்பட ஆகிய திரைப்படங்களை பள்ளிகளில் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் படைப்பாற்றல், விமர்சன சிந்தனை மற்றும் ஊடக விழிப்புணர்வை வளர்க்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

திரைப்பட தொழில் நுட்பங்களை புரிந்து கொள்ளவும் இது உதவும். மாணவர்களின் வளர்ச்சி மற்றும் அறிவை மேம்படுத்தும் வகையில் அமையும். திரைப்படங்கள் குறித்து பள்ளி அளவிலான போட்டிகளும் நடக்கும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது தவிர திரையரங்குகளில் மாணவர்களுக்கு ரூ.10 கட்டணத்தில் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us