/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ரூ.5 லட்சத்திற்குள் நிதி அதிகாரப் பகிர்வு: மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் புலம்பல்ரூ.5 லட்சத்திற்குள் நிதி அதிகாரப் பகிர்வு: மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் புலம்பல்
ரூ.5 லட்சத்திற்குள் நிதி அதிகாரப் பகிர்வு: மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் புலம்பல்
ரூ.5 லட்சத்திற்குள் நிதி அதிகாரப் பகிர்வு: மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் புலம்பல்
ரூ.5 லட்சத்திற்குள் நிதி அதிகாரப் பகிர்வு: மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் புலம்பல்
ADDED : ஜூன் 14, 2024 10:33 PM
தமிழகத்தில் வட்டார ஊராட்சி, கிராம ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளுக்கான நிதி பி.டி.ஓ.,க்கள் மூலம் விடுவிக்கப்படுகிறது.
ஊராட்சிகளில் பெருகி வரும் பணிச்சுமையை குறைக்கவும், திட்டங்களை விரைவில் செயல்படுத்தும் வீதமாக ரூ.5 லட்சத்திற்குள் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை செயல்படுத்துவதற்கான நிதியை விடுவிக்க மண்டல துணை பி.டி.ஓ.,க்களுக்கு நிதி அதிகார பகிர்வு வழங்கி அரசு கடந்தாண்டு உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 30 பி.டி.ஓ.,க்கள், 120 துணை பி.டி.ஓ.,க்கள் பணி புரிகின்றனர். ரூ.5 லட்சத்திற்குள் நிதி அதிகார பகிர்வு மண்டல துணை பி.டி.ஓ.,க்களுக்கு வழங்க வேண்டும். இருப்பினும் இந்த உத்தரவை அமல்படுத்தாமல் சில பி.டி.ஓ.,க்கள் தொடர்ந்து ரூ.5 லட்சத்திற்குள் உள்ள பணிகளுக்கான நிதி விடுவிப்பு ரசீதுகளை கையாளுகின்றனர்.
அரசு உத்தரவுப் படி தங்களுக்குரிய உரிமையை பி.டி.ஓ.,க்கள் வழங்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் திருப்பதி ராஜன் கூறுகையில், அரசு உத்தரவுப்படி ரூ.5 லட்சத்திற்கு மிகாத பணிகளை மண்டல பி.டி.ஓ.,க்கள் செயல்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
எல்லா பணிகளும் இதில் அடங்காது. மேலும் சம்பந்தப்பட்ட மண்டல பி.டி.ஓ.,க்கள் புகார் அளித்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.