/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் முகவை ஊருணியில் இறந்து மிதக்கும் மீன்கள் ராமநாதபுரம் முகவை ஊருணியில் இறந்து மிதக்கும் மீன்கள்
ராமநாதபுரம் முகவை ஊருணியில் இறந்து மிதக்கும் மீன்கள்
ராமநாதபுரம் முகவை ஊருணியில் இறந்து மிதக்கும் மீன்கள்
ராமநாதபுரம் முகவை ஊருணியில் இறந்து மிதக்கும் மீன்கள்
ADDED : மே 27, 2025 10:13 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் முகவை ஊருணியில் மீன்கள் இறந்து மிதப்பதால் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் தவிக்கின்றனர்.
ராமநாதபுரத்தில் பெரிய கண்மாய் முதல் சங்கிலி தொடர் போல் நகருக்குள் ஊருணிகள் அமைந்துள்ளன. இந்த ஊருணிகளில் நிரப்பப்படும் நீர் தான் கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் ராமநாதபுரம் மக்களுக்கு நிலத்தடி நீரை உருவாக்கி கொடுக்கிறது. நகரின் மையப்பகுதியில் உள்ள முகவை ஊருணியை சுற்றியுள்ள 3 வார்டுகளில் உள்ள கழிவு நீர் கலப்பதால் ஊருணியில் உள்ள நீர் விஷமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை நடைப்பயிற்சிக்கு ஊருணி பகுதிக்கு சென்றவர்கள் மீன்கள் இறந்து மிதப்பது குறித்து தகவல் தெரிவித்தனர். கரைகளில் ஒதுங்கி இறந்து மிதக்கும் மீன்களால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றை அப்புறப்படுத்தி முகவை ஊருணியில் கழிவு நீர் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து ஊருணிகளிலும் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. பல ஊருணிகள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நகர் பகுதிக்குள் இருக்கும் ஊருணிகளை சுத்தம் செய்ய வேண்டும்.
முகவை ஊருணியில் மட்டும் 3 டன்களுக்கு மேல் மீன்கள் இறந்து மிதந்தன. போதுமான ஆக்சிஜன் இல்லாததால் மீன்கள் இறந்துள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு காரணம் ஊருணியில் கலந்த கழிவு நீரே காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.