ADDED : செப் 04, 2025 11:26 PM
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே கூடலுார் ஊராட்சி நத்தக்கோட்டையில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு தொட்டியை தாங்கி நிற்கும் பில்லர் துாண்களிலும் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.
இதனால் தொட்டியில் இருந்து தண்ணீர் கசிகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே அதிகாரிகள் உறுதித் தன்மையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.