/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குறைவழுத்த மின் விநியோத்தால் பாதிப்பு குறைவழுத்த மின் விநியோத்தால் பாதிப்பு
குறைவழுத்த மின் விநியோத்தால் பாதிப்பு
குறைவழுத்த மின் விநியோத்தால் பாதிப்பு
குறைவழுத்த மின் விநியோத்தால் பாதிப்பு
ADDED : மே 14, 2025 12:31 AM
தொண்டி,: தொண்டி பேரூராட்சியில் வெள்ளை மணல் தெரு, தெற்கு தோப்பில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
கடந்த சில நாட்களாக குறைவழுத்த மின்சாரம் விநியோகத்தால் மின் சாதனங்களில் பழுது ஏற்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் வீடுகள் அதிகமுள்ள நிலையில் மேலும் வீடுகள் உருவாகி வருகின்றன.
இங்கு அடிக்கடி மின்தடை ஏற்படுவதுடன், குறைவழுத்த மின்சாரம் சப்ளை ஆகிறது. இரவில் துாக்கமின்மையால் தவிக்கும் நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.