ADDED : ஜன 06, 2024 05:35 AM
பரமக்குடி: -பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பகுதியில் பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டமான மகளிருக்கு இலவச சிலிண்டர் வழங்கும் விழா நடந்தது.
எமனேஸ்வரத்தில் 6 முதல் 10 வார்டுகளுக்கு உட்பட்ட 28 பேருக்கு அடுப்புகளுடன் கூடிய சிலிண்டர் வழங்கப்பட்டது. பா.ஜ., மாவட்ட செயலாளர் ரமேஷ் பாபு, நகர் பொருளாளர் கணேஷமூர்த்தி, மூத்த நிர்வாகி ராமலிங்கம், வார்டு கவுன்சிலர்கள் பானுமதி, துரை சரவணன், குபேந்திரன், தவமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.