/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறைந்துள்ளது: எஸ்.பி., பேச்சு சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறைந்துள்ளது: எஸ்.பி., பேச்சு
சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறைந்துள்ளது: எஸ்.பி., பேச்சு
சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறைந்துள்ளது: எஸ்.பி., பேச்சு
சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறைந்துள்ளது: எஸ்.பி., பேச்சு
ADDED : ஜூன் 27, 2025 11:39 PM

கமுதி: கமுதி அருகே பேரையூரில் உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி., திட்ட முகாம் நடந்தது. பேரையூர் வடக்கு தெருவில் பூவைசிய இந்திர குல வேளாளர் சங்கம் மற்றும் மாணவர் மன்றத்தின் சார்பில் 9 சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமரா அறையை எஸ்.பி.,சந்தீஷ் திறந்து வைத்தார். பின் அவர் பேசியதாவது:
மாவட்டத்தில் தற்போது வரை 2461 கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராவால் குற்றச் சம்பவங்கள் குறைந்து இருக்கிறது. தங்கள் பகுதியில் ஏதேனும் பிரச்னை என்றால் போலீசுக்கு தகவல் கொடுக்கவும். இளைஞர்கள் அனைவரும் தங்கள் பகுதியிலே பல்வேறு உயர் பதவியில் இருப்பவர்களை ரோல் மாடலாக எடுத்து நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
சிசிடிவி கேமராக்கள் குற்றம் கண்டுபிடிப்பதற்காக மட்டும் இல்லை. அதனை தடுப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தகவல் தெரிவித்தால் தேவையான பயிற்சி, கையேடு வழங்கப்படும்.
டி.எஸ்.பி., சண்முகம்,இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்.ஐ.,முருகன் உட்பட பூவைசிய இந்திர குல வேளாளர் சங்கத்தினர் மற்றும் இளைஞர்கள்,பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.