ADDED : ஜன 11, 2024 04:16 AM
கமுதி, : கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் சார்பில் மேட்டுப்பட்டி கிராமத்தில் நாட்டு நலப்பணித்திட்டம் முகாம் நடந்தது.
தாளாளர் அகமதுயாசின் தலைமை வகித்தார். முதல்வர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அரவிந்த்குமார் வரவேற்றார். கிராமத்தில் துப்புரவுப் பணி செய்து தண்ணீர் தொட்டிகள் பராமரிக்கப்பட்டது.
பொது சேவைகள் செய்யப்பட்டது. கிராமத்தின் முக்கிய வீதிகளில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி விழிப்புணர் ஊர்வலம் நடத்தினர். மரக்கன்று நடும் விழா நடந்தது. முதுகுளத்துார் டி.எஸ்.பி., சின்னக்கண்ணு மரக்கன்று கள் நட்டார். எஸ்.ஐ., ராஜீவ்காந்தி, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.