ADDED : ஜன 04, 2024 01:56 AM
நயினார்கோவில்; - பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவிலில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.
ஒன்றிய குழு தலைவர் வினிதா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெயபாலன், ஆணையாளர் முரளி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நயினார்கோவில் கிராம ஊராட்சிகளில் பழுதடைந்துள்ள ஊராட்சி அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், பஸ் ஸ்டாப், தொடக்கப்பள்ளி கழிப்பறைகள், சமையலறை கட்டடம், சுகாதார வளாகம், பால் பண்ணை, சமுதாயக்கூடம், கால்நடை மருத்துவமனை, நீர்த்தேக்க தொட்டிகள் என 59 கட்டடங்களை அகற்றுவது உள்ளிட்ட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் மணிசேகரன், நாகநாதன், இளவரசி, கவிதா, ஆனந்தி ஆகியோர் தங்களுக்கு ஒன்றிய அலுவலகத்தில் எந்த மரியாதையும் கொடுப்பதில்லை. எங்கள் பகுதி பணிகள் நிறைவேற்றுவது கூட தெரிவிப்பது கிடையாது. என்றனர்.
ஆணையாளர் முரளி: வரும் நாட்களில் கவுன்சிலர்களுக்கு முறையான தகவல் அளிக்கப்படும், என்றார்.
கூட்ட அரங்கம் சிறிய அறையில் செயல்படுவதால் அதிகாரிகள் அமர இடமின்றி சிரமபட்டனர்.