/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பாம்பன் கல்லுாரியில் நுகர்வோர் தின விழா பாம்பன் கல்லுாரியில் நுகர்வோர் தின விழா
பாம்பன் கல்லுாரியில் நுகர்வோர் தின விழா
பாம்பன் கல்லுாரியில் நுகர்வோர் தின விழா
பாம்பன் கல்லுாரியில் நுகர்வோர் தின விழா
ADDED : மார் 21, 2025 06:19 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் அன்னை ஸ்கொலாஸ்டிகா பெண்கள் கல்லுாரியில் உலக நுகர்வோர் தின விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி முதல்வர் ஆனிபெர்பெட் சோபி தலைமை வகித்தார். உணவுப்பொருளின் தரம், குறைகளை அதிகாரிகளிடம் புகார் அளிப்பது குறித்து தங்கச்சிமடம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் ஜான்போஸ், தர்மபுத்திரன் பேசினார்கள்.
பின் ராமேஸ்வரம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் லிங்கவேல், ஜெயராஜ், வெண்ணிலா ஆகியோர் உணவு செரிவூட்டல் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று பாதுகாப்பான உணவு, தரம் குறித்து விளக்கினர். கல்லுாரி நுகர்வோர் இயக்க பொறுப்பாளர் ஜூகி லியோன் நன்றி கூறினார்.