Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கும்பாபிஷேகம்..

கும்பாபிஷேகம்..

கும்பாபிஷேகம்..

கும்பாபிஷேகம்..

ADDED : ஜன 23, 2024 04:20 AM


Google News
பெருநாழி: பெருநாழி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் நிறை குலத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஜன.,21ல் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது.

அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆவாஹனம், எந்திரப் பிரதிஷ்டை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும் நாடி சந்தனம், பூர்ணாகுதியும் நடந்தது.

காலை 10:00 மணிக்கு நிறைகுளத்து அய்யனார், சைவத்துரை சுவாமி, கருப்பண்ண சுவாமி, முத்துலட்சுமி தாய், மற்றும் சேமங்குதிரை உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார் கும்பாபிஷேகம் செய்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us