/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராஜிவ் நினைவு நாளில் காங்., கட்சி அஞ்சலி ராஜிவ் நினைவு நாளில் காங்., கட்சி அஞ்சலி
ராஜிவ் நினைவு நாளில் காங்., கட்சி அஞ்சலி
ராஜிவ் நினைவு நாளில் காங்., கட்சி அஞ்சலி
ராஜிவ் நினைவு நாளில் காங்., கட்சி அஞ்சலி
ADDED : மே 21, 2025 11:59 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காங்., கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் 34வது நினைவு நாளில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் மத்திய கொடிக்கம்பம் பகுதியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம்பாண்டியன் கோபால் தலைமையில் நடந்தது.
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜோதிபாலன், மாநில செயலாளர் ஆனந்தகுமார், முன்னாள் கவுன்சிலர் காமராஜ் முன்னிலை வகித்தனர்.
ராஜிவ் உருவ படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர்.
இதில் வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், சேதுபாண்டியன், கோபால், நாகராஜன், கவுன்சிலர் மணிகண்டன், ஜெயக்குமார் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நகர் தலைவர் கோபி ஏற்பாடுகளை செய்திருந்தார்.