/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கலைபண்பாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டுகலைபண்பாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
கலைபண்பாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
கலைபண்பாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
கலைபண்பாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜன 08, 2024 05:40 AM
சாயல்குடி : விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கலைப்பண்பாட்டுப் போட்டி பரமக்குடியில் நடந்தது.
இதில், சாயல்குடி வி.வி.ஆர். நகரில் உள்ள கே.எஸ்.சண்முகவேல் நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். திருக்குறள் ஒப்புவித்தலில் மாணவர் யேசுராஜா, மாணவி சுயம்பு தர்ஷினி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இசைப் போட்டியில் மாணவி யோகிஷா இரண்டாமிடம் பெற்று, பரிசு, சான்றிதகள் பெற்றுள்ளனர்.
சாதித்த மாணவர்களை நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், பள்ளி தாளாளர் ஐசக் முத்துராஜ், தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி, ஆசிரியர்கள், பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் பாராட்டினர்.