Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வசூல் வேட்டை: கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு எழுத ரூ.100: குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வரும் மக்கள் தவிப்பு

வசூல் வேட்டை: கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு எழுத ரூ.100: குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வரும் மக்கள் தவிப்பு

வசூல் வேட்டை: கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு எழுத ரூ.100: குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வரும் மக்கள் தவிப்பு

வசூல் வேட்டை: கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு எழுத ரூ.100: குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வரும் மக்கள் தவிப்பு

ADDED : ஜூன் 02, 2025 10:27 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜலு உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதனால் தங்கள் மனுவின் மீது உடனடி விசாரணை மேற்கொண்டு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாரந்தோறும் பல்வேறு குறைகள், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தனியாகவும், கிராம மக்கள் ஒன்றாக இணைந்தும் அளிக்கின்றனர்.

இவர்களுக்கு உதவி செய்வதாக கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனு எழுதி தரும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். நல்ல வருமானம் கிடைப்பதால் மனு எழுதி தரும் நபர்களின் எண்ணிக்கை வாரந்தோறும் அதிகரித்து வருகிறது.

மனு எழுதி தருபவர்கள் இடையே போட்டா போட்டி ஏற்படுகிறது.மனு எழுத பேப்பர் வாங்கி கொடுத்து ஒரு மனுவிற்கு ரூ.50 முதல் ரூ.100 வரை பணம் வசூலிப்பதால் ஏழை மக்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக வயதானவர்களிடம் உதவி செய்வதாக கூறி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடக்கிறது. எனவே திங்கள் தோறும் தன்னார்வலர்கள் மூலம் மனு எழுதி தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்பவர்கள் மீது கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us