/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கீழக்கரையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கீழக்கரையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
கீழக்கரையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
கீழக்கரையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
கீழக்கரையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஜன 11, 2024 04:11 AM
கீழக்கரை : கீழக்கரை நகராட்சி வார்டுகளில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று கைரத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர் பாட்ஷா தலைமை வகித்தார். கீழக்கரை நகராட்சி சேர்மன் செகனாஸ் ஆபிதா முன்னிலை வகித்தார். தாசில்தார் பழனிக்குமார் வரவேற்றார். கமிஷனர் செல்வராஜ், நகராட்சி துணைத்தலைவர் ஹமீது சுல்தான், துணை தாசில்தார் பரமசிவன் உட்பட ஏராளமான வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர். கீழக்கரை நகராட்சியில் உள்ள 3, 6, 10, 11, 18, 19, 20, 21 வார்டுகளில் நடந்த முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்று கோரி விண்ணப்பித்தவருக்கு உடனடியாக சான்றிதழை எம்.எல்.ஏ., வழங்கினார். 17 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவை நகராட்சி தலைவர் வழங்கினார்.