/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் பள்ளியில் மைதானத்தில் வகுப்பறை கட்டடம்: பெற்றோர் எதிர்ப்பு ராமேஸ்வரம் பள்ளியில் மைதானத்தில் வகுப்பறை கட்டடம்: பெற்றோர் எதிர்ப்பு
ராமேஸ்வரம் பள்ளியில் மைதானத்தில் வகுப்பறை கட்டடம்: பெற்றோர் எதிர்ப்பு
ராமேஸ்வரம் பள்ளியில் மைதானத்தில் வகுப்பறை கட்டடம்: பெற்றோர் எதிர்ப்பு
ராமேஸ்வரம் பள்ளியில் மைதானத்தில் வகுப்பறை கட்டடம்: பெற்றோர் எதிர்ப்பு
ADDED : மே 29, 2025 11:16 PM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ரூ.1.41 கோடியில் வகுப்பறை கட்டுவதால் மாணவர்கள் கற்கும் திறன், விளையாட்டு திறன் பாதிக்கும் என பெற்றோர் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
பழமையான இப்பள்ளியில் 5 ஏக்கரில் பிரமாண்ட விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் தேசிய அளவில் சாதித்து உள்ளனர். மேலும் உள்ளூர் இளைஞர்கள், முன்னாள் மாணவர்கள் பல ஆண்டுகளாக இந்த மைதானத்தில் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி வளாகத்தில் நபார்டு நிதியுதவி ரூ.1.41 கோடியில் 6 புதிய வகுப்பறை கட்ட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. இக்கட்டடத்தை தற்போது மாணவர்கள் படிக்கும் பள்ளி வளாகத்திற்குள் கட்டாமல், விளையாட்டு மைதானத்தில் அமைக்க அடித்தளம் கட்டுமானப் பணியை துவக்கி உள்ளனர்.
இங்கு புதிய வகுப்பறை அமைந்தால் விளையாடும் மாணவர்கள் மூலம் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி பயிலும் திறன் பாதிக்கும். புதிய கட்டடங்களால் மைதானத்தில் இடவசதி குறைந்து மாணவர்களின் விளையாட்டு பயிற்சி திறன் பாதிக்கும்.
மேலும் உள்ளூர் இளைஞர்கள், முன்னாள் மாணவர்கள் விளையாடும் போது கல்வி பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகையால் இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து புதிய கட்டடத்தை பள்ளி நுழைவுப் பகுதி வளாகத்திற்குள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.