/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பெயரளவில் மக்களுடன் முதல்வர் முகாம்: காலியாக கிடந்த சேர்கள்பெயரளவில் மக்களுடன் முதல்வர் முகாம்: காலியாக கிடந்த சேர்கள்
பெயரளவில் மக்களுடன் முதல்வர் முகாம்: காலியாக கிடந்த சேர்கள்
பெயரளவில் மக்களுடன் முதல்வர் முகாம்: காலியாக கிடந்த சேர்கள்
பெயரளவில் மக்களுடன் முதல்வர் முகாம்: காலியாக கிடந்த சேர்கள்
ADDED : ஜன 03, 2024 06:03 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கவுன்சிலர்கள், அதிகாரிகள், அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். மக்கள் வருகையின்றி சேர்கள் காலியாக கிடந்தன.
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 13 துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்கள் வழங்கும் மனுக்களை பெற்றுக்கொண்டு தீர்வு காணும் வகையில் நகராட்சிகளில் வார்டு வாரியாக முகாம்கள் நடக்கிறது. இதன்படி நேற்று ராமநாதபுரம் நகராட்சியில் 28 முதல் 33 வார்டு மக்களுக்கான சிறப்பு முகாம் தனியார் மண்டபத்தில் நடந்தது.
கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் ராமநாதபுரம் காதர்பாட்ஷா, பரமக்குடி முருகேசன் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் கார்மேகம், கமிஷனர் அஜிதாபர்வின், கவுன்சிலர்கள், அதிகாரிகள் தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அதேசமயம் தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாமல் மக்களின் வருகையின்றி பெரும்பாலான சேர்கள் காலியாக கிடந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்வார்டுகளுக்கு அலுவலர்களை அனுப்பி மக்களை மனு அளிக்க அழைத்து வந்தனர்.
மக்களுடன் முதல்வர் முகாமில் கட்சி விழா போல கவுன்சிலர்கள், நிர்வாகிகள் அதிகளவில் மனு அளிக்கின்றனர். இம்முகாம்பெயரளவில் நடத்தப்படுவதாக எதிர்கட்சியினர், பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.