/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/முதுகுளத்துார் பேரூராட்சி கூட்டத்தில் தலைவர் -- கவுன்சிலர் வாக்குவாதம்முதுகுளத்துார் பேரூராட்சி கூட்டத்தில் தலைவர் -- கவுன்சிலர் வாக்குவாதம்
முதுகுளத்துார் பேரூராட்சி கூட்டத்தில் தலைவர் -- கவுன்சிலர் வாக்குவாதம்
முதுகுளத்துார் பேரூராட்சி கூட்டத்தில் தலைவர் -- கவுன்சிலர் வாக்குவாதம்
முதுகுளத்துார் பேரூராட்சி கூட்டத்தில் தலைவர் -- கவுன்சிலர் வாக்குவாதம்
ADDED : பிப் 05, 2024 11:23 PM
முதுகுளத்துார், -முதுகுளத்துார் பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் தலைவர் ஷாஜகான், கவுன்சிலர் சேகர் இடையே நடந்த வாக்குவாதத்தை தொடர்ந்து கவுன்சிலர் வெளி நடப்பு செய்தார்.
வாரச்சந்தை அருகே கட்டி முடிக்கப்பட்ட கடைகளுக்கு முறையாக டெண்டர் ஏதும் விடாமல் கடைகள் வாடகை கொடுத்துள்ளது சம்மந்தமாக பேசும்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு கவுன்சிலர் சேகர் வெளிநடப்பு செய்தார்.
முதுகுளத்துார் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சில் கூட்டம் தலைவர் ஷாஜகான் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் வயணபெருமாள், செயல் அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும் கவுன்சிலர் சேகர் பேசினார்.
முதுகுளத்துார் வாரச்சந்தை அருகே கட்டி முடிக்கப்பட்ட 17 கடைகளுக்கும் பேரூராட்சி நிர்வாகம் முறையாக டெண்டர் ஏதும் விடவில்லை. ஒரே நபருக்கு மூன்று கடைகளை வாடகைக்கு கொடுத்துள்ளனர். மூன்று கடைகளை உடைத்து ஒரே கடையாக மாற்றுவதற்கு அரசாணை ஏதும் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து பேரூராட்சி தலைவர் ஷாஜகான், கவுன்சிலர் சேகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் எந்த முடிவும் தெரியாததால் கவுன்சிலர் சேகர் வெளிநடப்பு செய்தார். பின் கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில் முடிவடைந்தது.
நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியான நிலையில் தெருக்களில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.