/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ காவிரி குண்டாறு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காவிரி குண்டாறு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
காவிரி குண்டாறு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
காவிரி குண்டாறு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
காவிரி குண்டாறு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 13, 2025 11:38 PM
தேவிபட்டினம்,: காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேவிபட்டினத்தில் ஒன்றிய தலைவர் அப்துல் ரஹீம் தலைமையில் நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளர் அர்ச்சுனன், மாவட்டச் செயலாளர் மலைச்சாமி முன்னிலை வகித்தனர்.
வெண்ணத்துார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நிரந்தர செயலாளர் நியமனம் செய்வதுடன் சில ஆண்டுகளாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து முறையாக விசாரணை செய்ய வேண்டும்.
கூட்டுறவு கடன் சங்க முறைகேடுகளை ஆய்வு செய்ய வலியுறுத்தி ஜூன் 24ல் ராமநாதபுரம் கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிர்வாகிகள் ராமநாதன், குணசேகரன், தங்கப்பா, அருளாந்து, பத்மநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்