/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மேலாய்குடியில் உடைந்த பாலம் விபத்துக்கு முன் சீரமைக்கலாமே மேலாய்குடியில் உடைந்த பாலம் விபத்துக்கு முன் சீரமைக்கலாமே
மேலாய்குடியில் உடைந்த பாலம் விபத்துக்கு முன் சீரமைக்கலாமே
மேலாய்குடியில் உடைந்த பாலம் விபத்துக்கு முன் சீரமைக்கலாமே
மேலாய்குடியில் உடைந்த பாலம் விபத்துக்கு முன் சீரமைக்கலாமே
ADDED : ஜூன் 05, 2025 12:53 AM

பரமக்குடி: - பரமக்குடி அருகே மேலாய்குடி கிராமத்தில் திருச்சண்முகநாதபுரம் செல்லும் வழியில் பாலம் சேதமடைந்துள்ளது. விபத்திற்கு முன் சீரமைக்க மக்கள் வலியுறுத்தினர்.
திருச்சண்முகநாதபுரம் செல்லும் வழியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிறிய கால்வாய் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ்புறம் உள்ள இரண்டு துாண்களும் இடிந்துள்ளது.
பாறை கற்களால் கட்டப்பட்ட பாலம் ஒவ்வொரு முறையும் தண்ணீர் வரும் காலத்திலும் அடித்து செல்லப்பட்டுள்ளது. தினந்தோறும் இதன் வழியாக டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்வதுடன் பள்ளி, கல்லுாரி வாகனங்களும் கடக்கும் நிலை உள்ளது. மேலும் அதிகப்படியான விளை நிலங்கள் உள்ள நிலையில் விவசாய பொருட்களை கொண்டு செல்லும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களும் செல்கிறது. வாகனங்கள் செல்லும் போது விபத்து அச்சத்துடன் மக்கள் பயணிக்கின்றனர்.
ஆகவே பாலத்தை உடனடியாக இடித்து புதிய பாலம் அமைக்க வேண்டும்.