/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வேளாண் அலுவலகம் அருகே கட்டடம் சேதம் வேளாண் அலுவலகம் அருகே கட்டடம் சேதம்
வேளாண் அலுவலகம் அருகே கட்டடம் சேதம்
வேளாண் அலுவலகம் அருகே கட்டடம் சேதம்
வேளாண் அலுவலகம் அருகே கட்டடம் சேதம்
ADDED : மே 11, 2025 11:23 PM

கடலாடி; கடலாடியில் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் முன்புறம் சேதமடைந்த நிலையில் பயன்படாத கட்டடம் உள்ளது. அதனை அப்புறப்படுத்த மக்கள் வலியுறுத்தினர்.
கடலாடியில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் 1965ல் கட்டப்பட்ட சேதமடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது. இங்கு இட நெருக்கடியில் அலுவலர்கள் பணி புரிகின்றனர்.
விவசாயிகள் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முடியாத அளவிற்கு இட நெரிசலுடன் உள்ளது.
இதனால் அருகே மரத்தடி நிழலில் விவசாயிகள் சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து ஒவ்வொருவராக செல்லும் நிலை உள்ளது.விவசாயிகள் கூறியதாவது:
சேதமடைந்த அரசு கட்டடம் அருகே வேளாண்மை அலுவலகம் உள்ளதால் இதனருகே செல்வதற்கு அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே பயன்படாத நிலையில் உள்ள கட்டடத்தை இடித்து அகற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இட நெருக்கடியான வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு புதிய கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய அலுவலகம் கட்ட வேண்டும் என்றனர்.