ADDED : அக் 16, 2025 11:54 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கலை இலக்கியக் கழகம் தலைவர் சுப்பையா எழுதிய 'இனிய இல்வாழ்க்கை' என்ற புத்தக வெளியீட்டு விழா பேராவூரில் நடந்தது.
பொதுச்செயலாளர் அப்துல்மாலிக் தலைமை வகித்தார். தலைவர் மாணிக்கவாசகம், கவிஞர்கள் ராம்மோகன், சவுந்திரபாண்டியன், பழனி யாண்டி முன்னிலை வகித்தனர்.
முதல் பிரதியை கவிஞர் கவிதா பெற்றுக்கொண்டார். ஆசிரியர்கள் களஞ்சியம், தமிழரசி உட்பட கலை இலக்கிய கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். இணைச் செயலாளர் வையச்சாமி நன்றி கூறினார்.


