ADDED : ஜன 03, 2024 06:05 AM
ராமநாதபுரம்: பரமக்குடியில் இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில்கவிஞர்இதயா எழுதிய அகர மலர்கள் என்ற கவிதை நுால்வெளியீட்டு விழா நடந்தது. கீழ முஸ்லிம் ஜமாத் சபைச் செயலாளர் சாதிக் அலிதலைமை வகித்தார்.
கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் ஷாகுல்ஹமீது, பொருளாளர் லியாக்கத்தலி கான், கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் ஷாஜஹான், தொடக்கப்பள்ளித் தாளாளர்கமால்தீன், நர்சரிப் பள்ளித் தாளாளர் முகமது உமர் மற்றும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்கேற்றனர்.