/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நரசிங்க கூட்டம் அரசு பள்ளியில் நுாலகத்திற்கு புத்தகம் வழங்கல்நரசிங்க கூட்டம் அரசு பள்ளியில் நுாலகத்திற்கு புத்தகம் வழங்கல்
நரசிங்க கூட்டம் அரசு பள்ளியில் நுாலகத்திற்கு புத்தகம் வழங்கல்
நரசிங்க கூட்டம் அரசு பள்ளியில் நுாலகத்திற்கு புத்தகம் வழங்கல்
நரசிங்க கூட்டம் அரசு பள்ளியில் நுாலகத்திற்கு புத்தகம் வழங்கல்
ADDED : ஜன 28, 2024 04:23 AM
கடலாடி : கடலாடி அருகே நரசிங்ககூட்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக பல்வேறு சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். தலைமை ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் கூறியதாவது:
மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக சென்னை புத்தகக் கண்காட்சியில் இருந்து லுாயிஸ் எழுத்தாளர் நிவேதிதா தம்பதியினர் புத்தகங்களை அனுப்பியுள்ளனர்.
தினமலர் நாளிதழ் பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் அறிவு சார்ந்த பொழுது போக்கு விஷயம் உள்ள புத்தகங்களை படிப்பதற்கு மாணவர்களுக்கு தருகிறோம். பறவைகள் பசியாறுவதற்கு உணவு மேடையும், பள்ளி மாணவர்கள் இயற்கையான தின்பண்டங்களை சாப்பிட வேண்டும் என்பதற்காக கடலை உருண்டை, கருப்பட்டி, பனங்கிழங்கு, எள்ளுருண்டை, உள்ளிட்ட தின்பண்டங்களை இடைவேளை நேரத்தில் வழங்குகிறோம். புது விஷயங்களை மாணவர்களிடம் ஊட்டுவதால் பெற்றோர் மத்தியில் வரவேற்பு உள்ளது என்றார்.
இடைநிலை ஆசிரியர் ஜெஸிந்தா, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் உடனிருந்தனர்.