ADDED : ஜன 13, 2024 04:28 AM
தொண்டி : புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பி.ஆர்.பட்டினத்தை சேர்ந்தவர் சாகுல்ஹமீது 45.
திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். மனைவி இறந்து விட்டார். தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் முனிஸ்வரர் கோயில் அருகில் இறந்து கிடந்தார். உடலில் காயங்கள் இல்லை. கொலையா, தற்கொலையா என எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.