/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தனுஷ்கோடியில் மணல் தீடையை கடக்கும் படகுகள்: மீன்துறை எச்சரிக்கை தனுஷ்கோடியில் மணல் தீடையை கடக்கும் படகுகள்: மீன்துறை எச்சரிக்கை
தனுஷ்கோடியில் மணல் தீடையை கடக்கும் படகுகள்: மீன்துறை எச்சரிக்கை
தனுஷ்கோடியில் மணல் தீடையை கடக்கும் படகுகள்: மீன்துறை எச்சரிக்கை
தனுஷ்கோடியில் மணல் தீடையை கடக்கும் படகுகள்: மீன்துறை எச்சரிக்கை
ADDED : செப் 11, 2025 05:41 AM
ராமேஸ்வரம் : தனுஷ்கோடி மணல் தீடையை கடந்து செல்லும் படகுகள், மீனவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்துறையினர் எச்சரித்தனர்.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம் திறந்து மூடுவதில் சிக்கல் ஏற்பட்டதால் ஆக.,12 முதல் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் புதிய பாலம் தற்போதைக்கு திறப்பது இல்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
இதனால் நாகை, புதுச்சேரியில் உள்ள ஆழ்கடல் படகுகள் மற்றும் கன்னியாகுமரி, துாத்துக்குடியில் உள்ள ஆழ்கடல் படகின் மீனவர்கள் வங்க கடல், அரபிக் கடலில் மீன்பிடிக்க செல்ல பாம்பன் பாலத்தை கடந்து செல்ல முடியாத சூழலில் ஆபத்தான தனுஷ்கோடி மணல் தீடையை கடந்து செல்கின்றனர். இதனால் படகுகள் சிக்கி மீனவர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகையால் தனுஷ்கோடியை கடந்து செல்லும் படகுகள் மற்றும் இவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு உதவும் தனுஷ்கோடி நாட்டுப்படகு மீனவர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குனர் தமிழ்மாறன் தெரிவித்துள்ளார்.