Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கருப்பட்டி விலை உயர்வு; கிலோ ரூ.350க்கு விற்பனை

கருப்பட்டி விலை உயர்வு; கிலோ ரூ.350க்கு விற்பனை

கருப்பட்டி விலை உயர்வு; கிலோ ரூ.350க்கு விற்பனை

கருப்பட்டி விலை உயர்வு; கிலோ ரூ.350க்கு விற்பனை

ADDED : செப் 23, 2025 06:21 AM


Google News
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் சீசன் இல்லாத நேரத்தில் பனங்கருப்பட்டி வரத்து குறைந்து அதிகபட்சமாக கிலோ ரூ.350 வரை விற்கப்படுகிறது.

இம்மாவட்டத்தின் அடையாளமாக பல்லாயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. அவற்றின் ஓலை, குருத்தை பயன்படுத்தி பெட்டிகள், பாய்கள் மற்றும் பதனீரில் பனங்கருப்பட்டி தயாரிக்கின்றனர். பதனீர், நுங்கும் சீசன் நேரத்தில் விற்பனை செய்கின்றனர். குறிப்பாக சாயல்குடி, பனைக்குளம் உள்ளிட்ட இடங்களில் பனங்கருப்பட்டி தயாரிக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பனைமரத்தில் பதனீர் இறக்கி, குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு கலந்து பனங்கருப்பட்டி தயாரிக்கிறோம். ஏப்., முதல் ஜூலை வரை சீசன் காலமாகும். அப்போது கிலோ ரூ.200 முதல் ரூ.250க்கு விற்றது. தற்போது சீசன் இல்லாத காலத்தில் கருப்பட்டி வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்து ராமநாதபுரத்தில் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது என பனைத்தொழிலாளர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us