/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ரூ.20.14 கோடியில் படகுகள் நிறுத்த பாலம்: கட்டுமான பணி தரத்தை ஆய்வு செய்யாமல்அதிகாரிகள் பாராமுகம்:ரூ.20.14 கோடியில் படகுகள் நிறுத்த பாலம்: கட்டுமான பணி தரத்தை ஆய்வு செய்யாமல்அதிகாரிகள் பாராமுகம்:
ரூ.20.14 கோடியில் படகுகள் நிறுத்த பாலம்: கட்டுமான பணி தரத்தை ஆய்வு செய்யாமல்அதிகாரிகள் பாராமுகம்:
ரூ.20.14 கோடியில் படகுகள் நிறுத்த பாலம்: கட்டுமான பணி தரத்தை ஆய்வு செய்யாமல்அதிகாரிகள் பாராமுகம்:
ரூ.20.14 கோடியில் படகுகள் நிறுத்த பாலம்: கட்டுமான பணி தரத்தை ஆய்வு செய்யாமல்அதிகாரிகள் பாராமுகம்:
UPDATED : ஜன 04, 2024 06:51 AM
ADDED : ஜன 04, 2024 01:50 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ரூ. 20 கோடியே 14 லட்சத்தில் கடந்த 2022 ல் பணிகள் துவங்கி படகுகள் நிறுத்தும் பாலம் கட்டுமான பணி நடக்கிறது. இப்பணியின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகள் வருவதில்லை, பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக் குறியாகியுள்ளதாக என மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
ராமேஸ்வரத்தில் 800-க்கும் மேலான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கின்றனர். இப்படகுகளை கரையில் நிறுத்தி மீன்களை இறக்க வசதியின்றி மீனவர்கள் அவதிப்படுகின்றனர். இதனை தவிர்க்க ராமேஸ்வரத்தில் மத்திய அரசின் நபார்டு வங்கி மூலம் ரூ. 20 கோடியே 14 லட்சத்தில் படகுகளை நிறுத்தி மீன்களை இறக்க ' டி வடிவில் ' பாலம் அமைக்கும் பணி 2022 ஜூலையில் துவங்கியது.
இப்பாலம் 200 மீ., நீளம், இதன் முனையில் 150 மீ., நீளத்தில் கட்டுமான பணி துரிதமாக நடக்கிறது. இப்பணி முடிய இன்னும் 6 மாதமே உள்ள நிலையில், தற்போது 60 சதவீதம் பணி முடிந்துள்ளது.
* அதிகாரிகள் பாராமுகம் :
பணி துவங்கி 18 மாதம் முடிந்த நிலையில், பாலத்தின் தரம், கட்டுமான பணியின் செயல்பாடுகள் குறித்து தினமும் அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் பாராமுகமாக உள்ளனர். இதுவரை சில வாரங்கள் மட்டுமே அதிகாரிகள் ஆய்வு செய்தததால், பாலத்தின் தரம் கேள்விக் குறியாக உள்ளது என மீனவர்கள் புகார் தெரிவித்தனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து பணிகளை குறிப்பிட்ட காலத்தில் தரமாக செய்துமுடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும்.