ADDED : ஜூன் 15, 2025 11:33 PM
கமுதி: கமுதி அருகே பெரிய உடப்பங்குளம் கிராமத்தில் பொட்டக்குளம் கண்மாய் கரையில் உள்ள அய்யனார், கணபதி, கருப்புசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வைகாசி பொங்கல் விழா நடந்தது.
கிராமமக்கள் பொங்கல் வைத்தும் கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்பு அய்யனாருக்கு சந்தனம், பன்னீர், பால் உட்பட பொருட்களால் அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரி துாக்கி மக்கள் ஊர்வலமாக சென்று தண்ணீரில் கரைக்கும் நிகழ்ச்சியில் பலர் பங்கேற்றனர்.