/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பரமக்குடியில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் பூஜைபரமக்குடியில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் பூஜை
பரமக்குடியில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் பூஜை
பரமக்குடியில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் பூஜை
பரமக்குடியில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் பூஜை
ADDED : ஜன 01, 2024 05:22 AM

பரமக்குடி; அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் பூஜை, பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடந்தது. இன்று முதல் வீடு வீடாக வழங்க உள்ளனர்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன.22ல் நடக்க உள்ளது.
உ.பி., அரசும், ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையும் ஏற்பாடுகளை செய்கின்றனர்.
சங் பரிவார் அமைப்புகள் மாபெரும் மக்கள் தொடர்பு இயக்கத்தை ஏற்படுத்தி, வீடு வீடாக அழைப்பிதழ் கொடுக்கும் பணியை இன்று முதல் மேற்கொள்ள உள்ளனர்.
அப்போது ராம ஜென்ம பூமியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ராமர் கோயில் புகைப்படம், ராமர் கோயிலின் சிறப்புகள் அடங்கிய அழைப்பிதழ், அயோத்தி குழந்தை ராமர் அட்சதை என வழங்க உள்ளனர்.
இப்பணியில் சங்பரிவார் சேர்ந்த அனைத்து ஹிந்து இயக்கங்கள், ராம பக்தர்கள், பொதுமக்கள் ஈடுபட உள்ளனர்.
நேற்று காலை பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் அழைப்பிதழ் பூஜை நடந்தது. ஏராளமான ராம பக்தர்கள் பங்கேற்றனர்.