/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆய்க்குடி கண்மாயை துார்வார விவசாயிகள் கோரிக்கை ஆய்க்குடி கண்மாயை துார்வார விவசாயிகள் கோரிக்கை
ஆய்க்குடி கண்மாயை துார்வார விவசாயிகள் கோரிக்கை
ஆய்க்குடி கண்மாயை துார்வார விவசாயிகள் கோரிக்கை
ஆய்க்குடி கண்மாயை துார்வார விவசாயிகள் கோரிக்கை
ADDED : செப் 15, 2025 05:56 AM

சிக்கல் : சிக்கல் அருகே ஆய்க்குடி கண்மாயை துார்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 350 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ஆய்க்குடி கண்மாய் 40 ஆண்டு களுக்கு முன்பு துார்வாரப் பட்டது.
அவற்றில் கூத்தன் கால்வாய் பகுதியில் இருந்து வரக்கூடிய வரத்து கால்வாய் அடைபட்டுள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆய்க்குடி விவசாயிகள் தட்சிணாமூர்த்தி, கருப்பசாமி ஆகியோர் கூறிய தாவது:
இப்பகுதியில் நெல், பருத்தி உள்ளிட்ட விவசாயிகளுக்கு ஆய்க்குடி கண்மாய் நீர் பயன்படுகிறது. இந்நிலையில் 40 ஆண்டுகளாக துார்வாராத நிலையால் பல இடங்களில் வரத்து கால்வாய் அடைபட்டுள்ளது.
வரத்துமடை சிதில மடைந்து காணப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் கண்மாயில் நீர் நிரம்பி சேமிக்க வழி இல்லாமல் வீணாக வாலிநோக்கம் கடலில் கலந்தது.
இந்நிலையை தவிர்க்க முறையாக ஆழப்படுத்தி அந்த மண்ணை கொண்டு கரைகளை பலப்படுத்த வேண்டும்.
இதன் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே பொதுப்பணித்துறை கண்மாய் பாசன அதிகாரிகள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.