ADDED : ஜன 11, 2024 04:56 AM
கமுதி : -கமுதி அரசு மருத்துவமனை மற்றும் மதன் காஞ்சனா பாராமெடிக்கல் செவிலியர் பயிற்சி மையம் சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தலைமை டாக்டர் துளசி தலைமை வகித்தார். டாக்டர் மருதமுத்து முன்னிலை வகித்தார்.
வளரிளம் பெண்களுக்கு கர்ப்பப்பை நீர்க்கட்டி, தைராய்டு, உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை இயற்கை சார்ந்த தீர்வு முறைகள் ஆலோசனை வழங்கப்பட்டது.
போலி விளம்பரங்கள், போலி மருந்துகள் மூலம் ஏற்படும் பக்க விளைவுகளை கண்டறிந்து அதன் மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உடன் செவிலியர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.