ADDED : ஜன 07, 2024 04:19 AM

கமுதி: -கமுதி அருகே செந்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி 55. கமுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். கமுதியில் இருந்து புதுக்கோட்டைக்கு 3 பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளார்.
அப்போது புதுக்கோட்டை அருகே சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டு மண் குவித்து வைத்துள்ளனர். அவ்வழியே வந்த போது மண் குவித்திருப்பது தெரியாமல் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் பயணம் செய்த ஆட்டோ டிரைவர் முனியசாமி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
பயணிகள் மூவர் காயமடைந்தனர். கமுதி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக முனியசாமி உடல் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முனியசாமி உறவினர்கள் குழாய் பதிக்கும் நிறுவனம் அஜாக்கிரதையாகவும் எச்சரிக்கை தடுப்புகள் வைக்காமல் உள்ளதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
உரிய நஷ்டஈடு வழங்கக்கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர். கமுதி இன்ஸ்பெக்டர் குருநாதன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.