ADDED : செப் 11, 2025 10:44 PM
கீழக்கரை; கீழக்கரை தாலுகா முத்தரையர் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.
கீழக்கரை லட்சுமிபுரம் மேலத்தெருவில் உள்ள முத்தரையர் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட இடத்தில் ராமநாதபுரம் மாவட்ட முத்தரையர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட உயர் மட்ட குழு தலைவர் கொல்லந்தோப்பு வேலுச்சாமி, மாவட்ட வழக்கறிஞர் தமிழ் வேந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.
முத்தரையர் சங்கத்தின் தலைவராக செல்வம், செயலாளராக நம்புராஜன், பொருளாளராக முருகானந்தம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.