/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக கலை நயமிக்க பனை ஓலை பொருள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக கலை நயமிக்க பனை ஓலை பொருள்
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக கலை நயமிக்க பனை ஓலை பொருள்
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக கலை நயமிக்க பனை ஓலை பொருள்
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக கலை நயமிக்க பனை ஓலை பொருள்
ADDED : ஜூன் 21, 2025 11:25 PM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி சுற்றுவட்டார கிராமங்களான களிமண்குண்டு,
தினைக்குளம், ரெகுநாதபுரம், மொத்தி வலசை, மேதலோடை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் பெருமளவு பனை ஓலையில் இருந்து கலைநயப் பொருட்கள் செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் பெருவாரியான பனை மரங்கள் உள்ள நிலையில் பனை மரத்தின் குறுத்தோலைகளை பயன்படுத்தி அவற்றை உரிய முறையில் சாயம் ஏற்றி கீற்றுப்பட்டைகளாக வாரி மதிப்பு கூட்டப்பட்ட கலைநய பொருட்கள் உற்பத்தி செய்வதில் கிராமப்புற பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலமாகவும் தொழிற்சார்ந்த விஷயங்களுக்காக குழுக்களாகவும் இயங்கி வீட்டில் இருந்தே வருமானம் ஈட்டி வருகின்றனர்.
இப்பகுதியில் வடிவமைக்கப்படும் பனை ஓலைகளால் செய்யக்கூடிய பல வண்ண பூங்கொத்து, வரவேற்பு நிலைப்படி மாலை, மலர் மாலை, தண்ணீர் பாட்டில் கூடு, மணி பர்ஸ், பூஜை கூடை, இடியாப்ப பெட்டி உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக பல்வேறு விதமான கலையப் பொருட்களை குழுவாக இயங்கி வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கியில் இயங்கி வரும் வாப்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிறுவனச் செயலர் அருள் கூறியதாவது:
பொதுவாக பனை சார்ந்த பொருட்களை ஊக்குவிக்கவும், பனைமரத்தின் குறுத்தோலையில் இருந்து வடிவமைக்க கூடிய கலைநய பொருள்களை கொண்டு குறைந்த முதலீட்டில் கிராமப்புற பெண்களுக்கு அதிக வருவாய் ஈட்டும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏற்கனவே பயிற்சி பெற்ற பெண்கள் மூலமாக இக்கலையை பெண்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம்.
வேலை வாய்ப்பு மற்றும் சான்றிதழ் உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகிறது. இப்பகுதியில் தயாரிக்கக் கூடிய பொருட்களை மொத்தமாக மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆர்டரின் பெயரில் வியாபாரிகளுக்கு சந்தைப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
மக்காத பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத மட்கும் தன்மை கொண்ட பனை ஓலையால் செய்யப்பட்ட பொருள்களுக்கு பல்வேறு சுற்றுலாத்தலங்களில் மவுசு நிலவுகிறது. அவற்றை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர் என்றார்.