/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 பயிற்சிக்கு விண்ணப்பம் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 பயிற்சிக்கு விண்ணப்பம்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 பயிற்சிக்கு விண்ணப்பம்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 பயிற்சிக்கு விண்ணப்பம்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 பயிற்சிக்கு விண்ணப்பம்
ADDED : செப் 13, 2025 11:24 PM
ராமநாதபுரம்: தமிழ்நாடு ஆதிதிராவி டர் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் டி.என்.பி. எஸ்.சி., குரூப் 1 முதன்மை தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதில் சேர குரூப் 1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிரா விடர், பழங்குடியினத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
மாணவர்கள் தாங்கள் விரும்பும் பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்து பயிற்சி பெறலாம். பயிற்சி கட்டணம், விடுதி கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் www.tahdco.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.