/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அம்மன் கோயில் முளைப்பாரி முளைகொட்டு உற்ஸவ விழா அம்மன் கோயில் முளைப்பாரி முளைகொட்டு உற்ஸவ விழா
அம்மன் கோயில் முளைப்பாரி முளைகொட்டு உற்ஸவ விழா
அம்மன் கோயில் முளைப்பாரி முளைகொட்டு உற்ஸவ விழா
அம்மன் கோயில் முளைப்பாரி முளைகொட்டு உற்ஸவ விழா
ADDED : ஜூலை 02, 2025 07:36 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அண்ணாநகர் குருவிக்காரன் காலனியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் முளைப்பாரி முளைகொட்டு உற்ஸவ விழாவில் பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோயிலில் ஜூன் 24ல் காப்பு கட்டுதலுடன் முளைகொட்டு உற்ஸவ விழா துவங்கியது. நேற்று முக்கிய நிகழ்ச்சியாக நொச்சியூருணி சென்று பால்குடங்கள், காவடிகள், அலகுகுத்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஜூலை 2) மாலையில் முளைப்பாரி ஊர்வலம் சென்று பேராவூருணியில் பூரிப்பு விழா நடக்கிறது.