Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆம்புலன்சில் பணிபுரிய மே 13ல் வேலை வாய்ப்பு முகாம்

ஆம்புலன்சில் பணிபுரிய மே 13ல் வேலை வாய்ப்பு முகாம்

ஆம்புலன்சில் பணிபுரிய மே 13ல் வேலை வாய்ப்பு முகாம்

ஆம்புலன்சில் பணிபுரிய மே 13ல் வேலை வாய்ப்பு முகாம்

ADDED : மே 10, 2025 07:14 AM


Google News
ராமநாதபுரம்: ஆம்புலன்ஸ் 102, 108, கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் 1962ல் பணிபுரிய ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

மாவட்டத்தில் ஆம்புலன்சில் பணிபுரிய வேலை வாய்ப்பு முகாம் ராமநாதபுரம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மே 13 ல் நடக்கவுள்ளது. 102 ல் சுகாதார ஆலோசகராக பணிபுரிய அடிப்படை தகுதிகள்: பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., இதில் ஏதாவது ஒரு படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது 19 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம் 18,000 மொத்தமாக வழங்கப்படும். ஓட்டுநர், மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள்:

ஓட்டுநருக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ., குறையாமல் இருக்க வேண்டும்.

இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்த பட்சம் ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும. தேர்வு பெற்றவர்களுக்கு மாத சம்பளம்15,820 ரூபாய் மொத்தமாக வழங்கப்படும்.

தேர்வு முறையானது எழுத்து தேர்வு, தொழில் நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண்பார்வை திறன், மற்றும் மருத்துவம் சம்பந்தமான தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு அனைத்து தேர்விலும் தேர்வு பெற்றவர்களுக்கு 10 நாட்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள்: பி.எஸ்.சி., நர்சிங், ஏ.என்.எம்., ஜி.என்.எம்., டி.எம்.எல்.டி., ஆகிய படிப்புகள் பிளஸ் 2 விற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் அல்லது பி.எஸ்.சி., லைப் சயின்ஸ், பி.எஸ்.சி., சுவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியமாக மொத்தம் ரூ.16,020 வழங்கப்படும். நேர்முகத்தேர்வு அன்று 19 வயதிற்கு குறையாமலும் 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல், முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, மனிதவளத்துறையின் நேர்முகத்தேர்வு, இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை, மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மேலும் விபரங்களுக்கு: 044-2888 8060, 89259 41105 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us