/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உத்தரகோசமங்கையில் திருக்கல்யாண உற்ஸவம் பக்தர்கள் மீது அட்சதை துாவப்பட்டது உத்தரகோசமங்கையில் திருக்கல்யாண உற்ஸவம் பக்தர்கள் மீது அட்சதை துாவப்பட்டது
உத்தரகோசமங்கையில் திருக்கல்யாண உற்ஸவம் பக்தர்கள் மீது அட்சதை துாவப்பட்டது
உத்தரகோசமங்கையில் திருக்கல்யாண உற்ஸவம் பக்தர்கள் மீது அட்சதை துாவப்பட்டது
உத்தரகோசமங்கையில் திருக்கல்யாண உற்ஸவம் பக்தர்கள் மீது அட்சதை துாவப்பட்டது
ADDED : மே 10, 2025 07:06 AM
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
மே 2 காலை 10:00 மணிக்கு மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட பெரிய கொடி மரத்தில் கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பத்து நாட்களும் பல்வேறு வாகனங்களில் உற்ஸவர் மங்களேஸ்வரி அம்மன் நான்கு ரத வீதிகளிலும் உலாவரும் நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கிறது.
சித்திரை பெருவிழாவை முன்னிட்டு மங்களேஸ்வரி அம்மன் மங்களநாதருக்கும் நேற்று மாலை 4:30 முதல் 6:00 மணிக்குள் மேளதாளங்கள் முழங்க திருக்கல்யாண உற்ஸவம் மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது.
முன்னதாக மங்களேஸ்வரி அம்மனுக்கு பெண் வீட்டாராக பாவித்து அவர்களின் சார்பில் பல்வேறு தாம்பூல தட்டுகளில் பழங்கள், சீர்வரிசை பொருட்கள், நலுங்கு, பட்டுப் புடவைகள், அணிகலன்கள் உள்ளிட்டவைகள் வரிசையாக அடுக்கப்பட்டு இருந்தன.
மங்களேஸ்வரி அம்மன் தலைவாரி சிக்கு எடுக்கும் நிகழ்ச்சியும், பின்னர் உற்ஸவர் மங்களநாத சுவாமி காலதாமதம் ஆனதால் கோபித்துக் கொண்டு காசிக்கு செல்வதாக ஐதீகத்துடன் செய்து காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலை 5:45 மணிக்கு கோயில் ஸ்தானிக குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்களால் உற்ஸவர் மங்களேஸ்வரி அம்மனுக்கு மங்கள நாண் அணிவிக்கப்பட்டது. உற்ஸவமூர்த்திகளான மங்களேஸ்வரி அம்மன், மங்களநாதர், பிரியாவிடையுடன் அருள்பாலித்தார். பக்தர்களின் மீது அட்சதை துாவப்பட்டது.
விழாவில் பங்கேற்ற பெண்கள் தாங்களாகவே திருமாங்கல்ய கயிற்றை புதிதாக சூடிக்கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவில் கைலாய வாத்தியங்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி அம்பாள் புறப்பாட்டுடன் பள்ளியறை பூஜையுடன் நிறைவடைந்தது.