/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வேளாண் பட்டதாரிகளால் எளிதில் வெற்றி பெற முடியும்: முன்னாள் டி.ஜி.பி., பேச்சு வேளாண் பட்டதாரிகளால் எளிதில் வெற்றி பெற முடியும்: முன்னாள் டி.ஜி.பி., பேச்சு
வேளாண் பட்டதாரிகளால் எளிதில் வெற்றி பெற முடியும்: முன்னாள் டி.ஜி.பி., பேச்சு
வேளாண் பட்டதாரிகளால் எளிதில் வெற்றி பெற முடியும்: முன்னாள் டி.ஜி.பி., பேச்சு
வேளாண் பட்டதாரிகளால் எளிதில் வெற்றி பெற முடியும்: முன்னாள் டி.ஜி.பி., பேச்சு
ADDED : ஜூலை 02, 2025 07:52 AM

கமுதி; கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தலைவர் அகமதுயாசின் தலைமை வகித்தார். முதல்வர் ராமர் வரவேற்றார். 2015, 2017, 2018, 2019ம் ஆண்டு படித்த 154 மாணவர்களுக்கு பட்டங்களை ஓய்வு பெற்ற முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு வழங்கினார்.பின்பு அவர் பேசியதாவது:
வேளாண் துறையில் உயர்கல்வி பயின்று பல்வேறு துறைகளில் பணியாற்ற வேண்டும்.வேளாண் படிப்பின் முக்கியத்துவம் பற்றியும் வேளாண் துறையில் பட்டம் பெற்ற பலரும் அரசு உயர் பதவிகள் மற்றும் தொழிலதிபர்களாக உள்ளனர். அரசு தேர்வுகளான டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., போன்ற தேர்வுகளை வேளாண் பட்டதாரிகளால் எழுதி வெற்றி பெற முடியும்.
வரும் காலங்களில் வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள் உணவு உற்பத்தியில் மிகவும் முக்கிய புள்ளிகளாக திகழ்வார்கள். மாணவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றார். விழாவை பேராசிரியர் திருவேணி ஒருங்கிணைத்தார். மாணவர்கள்,பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.